காயல்பட்டினத்தில் ரூ.80 கோடியில் வளா்ச்சிப் பணிகள்
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் ரூ.62½ கோடியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ பிரிவுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.

காயல்பட்டினத்திலுள்ள அரசு மருத்துவமனையில் ரூ.62½ கோடி மதிப்பில் ஏழு மாடியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ பிரிவு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

மருத்துவமனை

மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். இதில் கனிமொழி எம்.பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய சிறப்பு மருத்துவ பிரிவு கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செ.கற்பகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறை அதிகாரி விக்னேஸ்வரன், பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் தம்பிரான் தோழன், காயல்பட்டினம் மருத்துவமனை அதிகாரி கோகிலா, நகரசபை தலைவர் கே. ஏ.எஸ் முத்து முகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து காயல்பட்டினம் ஆறாம் பள்ளி தெரு, நெசவு தெரு கூலக்கடை பஜார், மெயின் ரோடு, ஆகிய நான்கு இடங்களில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 63 கே.வி.கே. மின் மாற்றிகளை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். தொடர்ந்து காயல்பட்டினத்தில் 113 சாலைப் பணிகளுக்கும், வடிகால் வாய்க்கால் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. காயல்பட்டினத்தில் 2ஆயிரத்து 350 எல்.இ.டி. விளக்குகள் இயக்கி வைக்கப்பட்டதுடன், நகராட்சிக்கு 15 புதிய பேட்டரி ஆட்டோக்கள், 3 மினிவேன்களை எம்.பி. வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) ரோமோனா, திருச்செந்தூர் கோட்ட பொறியாளர் விஜய சங்கர பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் கலைக்கண்ணன், ஆறுமுகநேரி உதவி பொறியாளர் ஜெபஸ் சாம், நகர சபை துணைத் தலைவர் சுல்தான் லெப்பை, கவுன்சிலர்கள் மாரீஸ்வரி, முருகன், கதிரவன் தஸ்நேவிஸ்ராணி, ரசிதா பிவி, அஜ்வாது, ரோஷியா பானு, மெய்தீன், ந.பூங்கொடி, ரங்கநாதன், செய்யது ஆசியா, முத்து ஜெய்னம்பு முகமது சையது பாத்திமா, அபூபக்கர் சித்தீக், ராமஜெயம், தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குளி ரமேஷ், தமிழக மீனவர் நல வாரிய உறுப்பினர் ஜெபமாலை, காயல்பட்டினம் ஐக்கிய பேரவை தலைவர் மைதீன் தம்பி என்ற துரை காக்கா, பொது செயலாளர் வாவு சம்சுதீன் செயலாளர் நவாஸ் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகராட்சி ஆணையாளர் குமார் சிங் நன்றி கூறினார்.

புதிய ரேஷன்கடை திறப்பு

தொடர்ந்து ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து பகுதியான மடத்துவிளை பகுதியில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த கூட்டுறவு பண்டகசாலை ரேஷன் கடைக்கு ரூ.13½ லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிட திறப்பு விழா நேற்று காலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் நகர பஞ்சாயத்து தலைவி கலாவதி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கணேசன், வார்டு உறுப்பினர் தயாவதி ஜோசப், நகர தி.மு.க.செயலாளர் ஏ.கே. நவநீத பாண்டியன், வட்டார வழங்கல் அதிகாரி பாலசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராஜாமணிபுரம் பகுதியில் ரூ.13 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை கட்டிடத்தை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலெக்டர் செந்தில்ராஜ், பஞ்சாயத்து உறுப்பினர்கள் சிவக்குமார், ஷங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தென்திருப்பேரை

இதேபோன்று, தென்திருப்பேரை பேரூராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக ரூ.8.41 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் குடிநீர் திட்டத்தின் கீழ் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

கலந்து கொண்டவர்கள்

இவ்விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், தி.மு.க. மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் நவீன்குமார், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் மாலா, தென்திருப்பேரை பஞ்சாயத்து செயல் அலுவலர் ரமேஷ்பாபு, தென்திருப்பேரை பஞ்சாயத்து தலைவர் மணிமேகலை ஆனந்த், ஆழ்வார்திருநகரி பஞ்சாயத்து தலைவர் சாரதா பொன்இசக்கி, தென்திருப்பேரை பஞ்சாயத்து கவுன்சிலர் ஆனந்த், தொழிலதிபர் கண்ணன் பண்ணையார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments