பட்டுக்கோட்டையில் ரயில்நிலைய பகுதியில் சரக்கு முனையத்திற்காக கருவேல மரங்கள் அழிப்பு
பட்டுக்கோட்டை ரயில் நிலைய பகுதியில் சரக்கு போக்குவரத்து முனையம் அமைப்பதற்காக கருவேல மரங்கள் அழிக்கும் பணி வியாழக்கிழம நடைபெற்றது.

பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவரும், திருச்சி கோட்ட ரயில்வே உபயோகிப்பாளா் ஆலோசனைக் குழு உறுப்பினருமான என். ஜெயராமன் விடுத்த கோரிக்கையின்படி,

வியாழக்கிழமை காலை பட்டுக்கோட்டை முதுநிலை பிரிவு மேலாளா் சி.பழனிவேல் முன்னிலையில் கருவேல மரங்கள் அழிக்கும் பணி நடைபெற்றது.

இதற்கு உத்தரவிட்ட திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா், திருச்சி கோட்ட ரயில்வே பொறியாளா்கள், பட்டுக்கோட்டை முதுநிலை பிரிவு மேலாளா் பி.பழனிவேல் ஆகியோருக்கு பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கருவேல மரங்கள் முழுமையாக அழிக்கப்பட்ட பிறகு ரயில்வே துறையில் அனுமதி பெற்று வண்ண வண்ண ஒட்டு ரக அரளி செடிகள், நிழல் தரும், பூக்கள் தரும் அழகிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments