பாரம்பரிய காய்கறிகள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் - புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பாரம்பரிய காய்கறி சாகுபடியினை சொந்த நிலம் மற்றும் குத்தகை நிலத்தில் செய்யும் விவசாயிகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

தோட்டக்கலைத்துறையின் இணையதளமான www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வட்டார தோட்டக்கலை அலுவலகங்களில் அளித்திட வேண்டும்.

15.09.2023 வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும்

இதன் முக்கிய நோக்கம் :

1.அதிக பாரம்பரிய காய்கறி இரகங்களை மீட்டெடுத்தல்,

2.பிற விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல்

3.நீர் மேலாண்மை

4.முறையான மண்வள மேம்பாடு

5.அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாவட்ட அளவில் விருது வென்றவர்களுக்கு

முதலாம் பரிசாக ரூ.15,000 இரண்டாம் பரிசாக ரூ.10,000 வங்கி வரைவோலையாக சான்றிதழுடன் அரசு விழாக்களின் போது வழங்கப்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments