புதுக்கோட்டை அரசு ஆரம்ப பள்ளி நடைபெற்ற மாணவர் தேர்தல் : ஜனநாயகத்தின் சான்று!




மாணவர்களிடம் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் குடுமியான்மலை ஊராட்சிக்கு உட்பட்ட மரிங்கிப்பட்டி அரசு ஆரம்ப மேல்நிலைப் பள்ளியில் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது.

இதற்காக ஆசிரியர் திருப்பதி தலைமையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. தலைமை தேர்தல் அதிகாரியாக தலைமை ஆசிரியர் நாகலட்சுமியும், தேர்தல் அலுவலர்களாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்துமணி, கருப்பையா, பழனியாண்டி ஆகியோரும் செயல்பட்டனர். மேலும் தேர்தல் பார்வையாளர்களாக ஆசிரியர்களும், பெற்றோர்களும் பங்கு பெற்றனர்.

தேர்தலுக்கான தேதி முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 14 மாணவர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் மாணவர்கள் அனைவரும் வரிசையாக நின்று வேட்பாளர்கள் புகைப்படம் அடங்கிய வாக்குச் சீட்டைப் பெற்று ஜனநாயக முறைப்படி வாக்களித்தனர்.


இறுதியாக வெற்றி பெற்றவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணைந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த தேர்தலில் உள்துறை அமைச்சராக பிரவீன், தர்வீந்தனாவும், வெளியுறவுத்துறை அமைச்சர்களாக சூரிய பிரகாஷ், தரணி ஆகியோரும், மதிய உணவுத்துறை அமைச்சராக விக்னேஸ்வரன் என்பவரும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்தலில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் வாக்காளர்களாக பங்கேற்று வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மாணவர்களுக்கு இளம் வயதிலேயே தேர்தலின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் தெரியப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த தேர்தல் அந்தப் பகுதி மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த முயற்சி இந்தியாவிற்கு தேவையான நாளைய நல்ல தலைவர்களை உருவாக்கும் என்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments