கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் 5-வது வீதியில் தேங்கி இருந்த சாக்கடையை அகற்றிய இளைஞர்கள்!
கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் 5-வது வீதியில் பல மாதங்களாக தேங்கி இருந்த சாக்கடையை இளைஞர்கள் அகற்றினர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் 5-வது வீதியில் பல மாதங்களாக சாக்கடை தேங்கி இருப்பதால் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்த நிலையில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அவுலியா நகர் 5-வது வீதியில் நேற்று 17/07/2023 பல மாதங்களாக தேங்கி நோய் தொற்று ஏற்பட காரணமாக இருந்த சாக்கடையை வெளியேற்றி சுத்தம் செய்தனர்.

அவுலியா நகரில் மூன்று வீதிக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி நிர்வாகத்தால் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையானது மேடு, பள்ளமாக அமைக்கப்பட்டதால் தெருவில் கழிவுநீர் தேங்கி நின்றதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  

அவுலியா நகர் பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடை, குப்பைகள் மற்றும் சாலை வசதி செய்து தரவேண்டி ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை அப்பகுதி மக்கள் முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

அவுலியா நகர் 5-வது வீதியில் தேங்கி நின்ற சாக்கடையை அகற்றிய இளைஞர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

இப்பணியை செய்த அவுலியா நகர் பகுதி இளைஞர்களை GPM மீடியா மனதார பாராட்டுகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments