TNEB: தமிழகம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் பொறியாளர்களுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை







நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொறியாளர்களுக்கு, தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களில் 10,000-க்கும் அதிகமான மீட்டர்கள் பழுது ஆகியிருப்பதாக புகார் வந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்த மீட்டர்களை மாற்றிய பின், அதுகுறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) சூலை 01, 1957-இல் சட்டப்படி உருவாக்கப்பட்ட ஓர் பொதுத்துறை அமைப்பாகும். மின்சார வழங்கல் சட்டம், 1948-இன் கீழ் அந்நாளைய அரசின் மின்சாரத் துறைக்கு மாற்றாக அமைக்கப்பட்டது. இது தமிழக அரசின் ஆற்றல் துறையின் கீழ் இயங்குகிறது. இன்றைக்கு தமிழகத்தில் மின்வசதி பெறுவோர் எண்ணிக்கை 2 கோடியே 3 இலட்சத்து 87 ஆயிரமாகவும், மின்உற்பத்தி நிறுவு திறன் 10 ஆயிரத்து 214 மெகாவாட் ஆகவும் உள்ளது.

இந்த வாரியம் மேலும் செம்மையாகச் செயலாற்றிடவும், மின்உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தைப் பொதுமக்களின் தேவைக்கேற்ப வழங்குவதற்கு ஏதுவாகவும், மத்திய அரசு பிறப்பித்த சட்டத்தின் படி தமிழ்நாடு மின்சார வாரியம், ஜூலை 01, 2010 அன்று முதல் மூன்று அமைப்புகளாகத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் மீட்டர் என்பது ஒரு மின்னணு சாதனமாகும். இது மின்சார ஆற்றல் நுகர்வு, மின்னழுத்த அளவுகள், மின்னோட்டம் மற்றும் சக்தி காரணி போன்ற தகவல்களைப் பதிவு செய்கிறது மற்றும் நுகர்வோர் மற்றும் மின்சார வழங்குநர்களுக்கு தகவல்களைத் தெரிவிக்கிறது. 

இத்தகைய மேம்பட்ட மீட்டர் உள்கட்டமைப்பு (ஏ.எம்.ஐ) தானியங்கி மீட்டர் ரீடிங்கிலிருந்து (ஏ.எம்.ஆர்) வேறுபடுகிறது, இது மீட்டருக்கும் சப்ளையருக்கும் இடையில் இருவழி தகவல்தொடர்புகளை செயல்படுத்துகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments