புதுக்கோட்டை நகரில் 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டம்: அமைச்சர்கள் ஆய்வு






புதுக்கோட்டை நகரில் 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 கிமீ தொலைவுள்ள சாலையை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் புதன்கிழமை காலை நேரில் நடந்தே பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தில் நடைப்பயிற்சிக்கான சாலைகள் ஒழுங்கு செய்யப்படவுள்ளன.

புதுக்கோட்டை திலகர் திடலில் இருந்து மாலையீடு வரை 4 கிமீ தொலைவுக்கான இந்தச் சாலையில் இடையிடையே ஓய்வெடுக்கும் வகையில் இடவசதி மேற்கொள்ளப்படவும் உள்ளது.

இந்த ஆய்வு நடை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments