ஆவுடையார்கோவிலில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
ஆவுடையார்கோவில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் சண்முகசுந்தரம் கோரிக்கை குறித்து பேசினார். மாவட்ட தலைவர் கண்ணையா வாழ்த்துரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பணியேற்ற இடைநிலை ஆசிரியர்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் நிறைவுற்ற நிலையில் தேர்வு நிலை ஊதியம் வழங்காததை கண்டித்தும், வட்டார கல்வி அலுவலர்களின் அலட்சியம் மற்றும் பாரபட்ச போக்கை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments