ரூ.20 கோடியில் ராமநாதபுரம் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் இன்று முதல் பஸ் நிலையம் இடமாற்றப்படுகிறது. பயணிகள் வசதிக்காக தற்காலிகமாக 2 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பஸ் நிலையம்
ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் இயங்கி வந்தது. இந்த பஸ் நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து அடிக்கடி பயணிகள் மீது இடிந்து விழுந்ததால் இந்த பஸ் நிலையத்தை முழுவதுமாக இடித்து விட்டு ரூ.20 கோடி செலவில் புதிதாக கட்ட அரசு உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே 22 பஸ்கள் நிறுத்தக்கூடிய இடம், 45 கடைகளுடன் இயங்கி வந்த இந்த பஸ் நிலையம் இடிக்கப்பட்டு விரிவாக்கம் செய்து 35 பஸ்கள் நிறுத்தும் இடம், 90 கடைகள் கட்டப்பட உள்ளது.
இதற்காக பஸ் நிலையத்தில் இருந்த கடைகள் காலி செய்யப்பட்டு பாதி கட்டிடம் இடிக்கப்பட்டு விட்டது. மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டி இருந்ததால் நேற்று வரை இந்த பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் ராமநாதபுரத்தில் இருந்து சென்னை, ராமேசுவரம், திருச்சி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர், சாயல்குடி, கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம், தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் இன்று(வியாழக்கிழமை) முதல் ரெயில் நிலையம் எதிரில் உள்ள நகராட்சி பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. மேலும் மதுரை, மானாமதுரை, பரமக்குடி, கோவை, ஈரோடு, சேலம், முதுகுளத்தூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் தற்போதைய பஸ் நிலையம் அருகே சந்தை திடலில் இருந்து தற்காலிகமாக இயக்கப்பட உள்ளது.
ஆய்வு
இந்த பஸ்கள் விரைவில் மதுரை ரோட்டில் உள்ள வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்திற்கு மாற்றப்பட உள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், ஆணையாளர் அஜிதா பர்வீன் ஆகியோர் தெரிவித்தனர். இன்று முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ள நகராட்சி பழைய பஸ் நிலையத்தில் பல லட்ச ரூபாய் செலவில் சிமெண்டு தளம், கழிப்பறை, தற்காலிக கடைகள், மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனை கலெக்டர் விஷ்ணுசந்திரன், பயிற்சி சப்-கலெக்டர் நாராயணசர்மா, காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் கார்மேகம், ஆணையாளர் அஜிதாபர்வீன் மற்றும் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.