கோபாலப்பட்டிணத்தில் அவுலியா நகர் நுழைவாயில் இடத்தை சுத்தம் செய்து இளைஞர்கள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது

கோபாலப்பட்டிணத்தில் அவுலியா நகர் நுழைவாயில் இடத்தை சுத்தம் செய்து இளைஞர்கள் சார்பில் மரக்கன்றுகள் நட்டனர் 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் 20.07.2023 வியாழக்கிழமை அன்று அவுலியா நகர்  நுழைவாயில் இடங்களை சுத்தம் செய்து 2 ஆலமரம் மரக்கன்றுகள் நட்டனர்.

இதில் ஊர் தன்னார்வ இளைஞர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் மரக்கன்றுகளை விதைத்தனர்.

ஒரு சில ஊர்களில் உள்ள இளைஞர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் இந்த காலகட்டத்தில் ஊர் நலனை கருத்தில் கொண்டு  சுகாதாரமான சுற்றுசூழலை உருவாக்கிட செயல்படும்  ஊர் தன்னார்வ இளைஞர்களுக்கு GPM மீடியா சார்பாக மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments