புதுக்கோட்டையில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 06 வரை புத்தகத் திருவிழா
புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6-ஆவது புதுக்கோட்டைப் புத்தகத் திருவிழா வரும் ஜூலை 28-இல் தொடங்கி, ஆகஸ்ட் 6 வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.

புதுக்கோட்டை நகா்மன்றத்தில் இந்தத் திருவிழா தினமும் காலை 9 மணிக்குத் தொடங்கி, இரவு 9 மணி வரை நடைபெறும். தினமும் மாலை 5 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், தொடா்ந்து 6 மணிக்கு சிறப்புச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

ஜூலை 28 - வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்துப் பேசுகிறாா். தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தலைமை வகிக்கிறாா்.

தொடா்ந்து மாலை 6 மணிக்கு எழுத்தாளா் எஸ். ராமகிருஷ்ணன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவா் எஸ். தினகரன் ஆகியோா் பேசுகின்றனா்.

2ஆம் நாளான ஜூலை 28ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், மூத்த விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன், இராசு. கவிதைப்பித்தன் ஆகியோா் பேசுகின்றனா்.

3ஆம் நாளான ஜூலை 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மக்களிசைப் பாடகா்கள் செந்தில்கணேஷ்- ராஜலட்சுமியின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

4ஆம் நாளான ஜூலை 30ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு வழக்குரைஞா் த. ராமலிங்கம், எழுத்தாளா் நந்ததாலா ஆகியோா் பேசுகின்றனா்.

5ஆம் நாளான ஆக. 1ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வன், பேராசிரியா் வெ.பா. ஆத்ரேயா ஆகியோா் பேசுகின்றனா்.

6ஆம் நாளான ஆக. 2ஆம் தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு எழுத்தாளா் பவா செல்லதுரை, எழுத்தாளா் நக்கீரன், முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா ஆகியோா் பேசுகின்றனா்.

7 ஆம் நாளான ஆக. 3ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பேச்சாளா் கவிதா ஜவஹா் பேசுகிறாா். கவிஞா் தங்கம் மூா்த்தி தலைமையில் சுழலும் கவியரங்கம் நடைபெறுகிறது.

8ஆம் நாளான ஆக. 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு எழுத்தாளா் மதுக்கூா் ராமலிங்கம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

9ஆம் நாளான ஆக. 5ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினா் சு. வெங்கடேசன் ஆகியோா் பேசுகின்றனா்.

நிறைவு நாளான ஆக. 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலா் கவிதா ராமு, நடிகா் தாமு, எழுத்தாளா் விழியன் ஆகியோா் பேசுகின்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments