நாகப்பட்டினத்தில் இருந்து இனி இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பலில் பயணிக்கலாம்: இந்தியா - இலங்கை பிரதமர்கள் சந்திப்பில் ஒப்பந்தம் கையெழுத்தானது!




தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான ஒப்பந்தம் 21-07-2023 டெல்லியில் கையெழுத்தாகியுள்ளது.

டெல்லியில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே  இந்திய பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய  ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியாவின் யுபிஐ  பரிவர்த்தனையை இலங்கையில் அனுமதிக்க முக்கிய ஒப்பந்தத்தில் இலங்கை அதிபர் விக்கிரமசிங்கேயும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கையெழுத்திட்டனர்.

அதேபோல நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே பயணிகள் கப்பல்  போக்குவரத்து தொடங்கவும்  ஒப்பந்தம் கையெழுத்தானது. இதேபோல மேலும் இரண்டு ஒப்பந்தங்கள் என்று மொத்தம் நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்து ஆகியுள்ளன. 


இந்த கப்பல் போக்குவரத்திற்கு இலங்கையில் அனைத்து அனுமதிகளும் தரப்பட்டு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த கப்பலில் முதற்கட்டமாக 120 பயணிகள் வரை பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயணியும் தலா 100 கிலோ வரையிலான பொருட்களை எடுத்துசெல்லலாம். கட்டணமாக இலங்கை ரூபாயில் 40 ஆயிரம் (இந்திய மதிப்பு ரூ.9,878) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு 5 நிறுவனங்கள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க விண்ணப்பித்திருந்தன. இதில் ஐ.என்.டி.எஸ்.ஆர்.ஐ. என்ற நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments