மணமேல்குடி ஒன்றியத்தில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு பாடவாரியாக கற்றல் விளைவுகள் குறித்த ஒரு நாள் பயிற்சி!



மணமேல்குடி ஒன்றியத்தில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு பாடவாரியாக கற்றல் விளைவுகள் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியதிற்கு உட்பட்ட மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு பயிற்சியினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலர் இந்திராணி மற்றும் மணமேல்குடி வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

இப்பயிற்சியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு கற்றல் விளைவுகள் குறித்த விளக்கங்களையும், செயல்பாடுகளையும் ஆசிரியர்களுக்கு  குழு செயல்பாடுகளாகவும் வழங்கப்பட்டது.

மேலும் ஒவ்வொரு பாடத்துக்கு உள்ள கற்றல் விளைவுகளை மாணவர்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இப்பயிற்ச்சியில் கருத்தாளர்களாக தலைமை ஆசிரியர் பாசிமதி ஆசிரியர் பயிற்றுநர் வேல்சாமி மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இளமாறன், ராஜகுமாரி    ஆகியோர் செயல்பட்டனர்.

இப் பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர்  அங்கயற்கன்னி மற்றும் ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர்.










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments