தமிழ்நாட்டில இப்படி ஒரு அலையாத்தி காடு இருக்கா? ஆசியாவின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் ஒன்றான முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் சுற்றுலா பிரியர்களே தயாராகுங்க!

அடியாத்தி... தமிழ்நாட்டில இப்படி ஒரு அலையாத்தி காடு இருக்கா? சுற்றுலா பிரியர்களே தயாராகுங்க!

சுற்றிலும் நீர், இருபுறமும் அடர்ந்த மரங்கள், படகில் நெடுதூரப் பயணம், ஆங்காகே குட்டிக் குட்டி தீவுகள் என நம்மை மெய் மறக்க வைப்பதாக முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் உள்ளன. இது ஆசியாவின் 2 வது பெரிய அலையாத்திக் காடுகளாக விளங்குகிறது.

மாங்குரோவ் காடுகள் என்றடவுன் நம் நினைவுக்கு சட்டென வருவது பிச்சாவரம் காடுகள் தான். இந்த காடுகள் சதுப்பு நில காடுகள் எனவும், அலையாத்தி காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தப் பகுதிகள் அரிய வகை விலங்கினங்கள், மீன்கள், பூச்சிகள், பறவைகள் வாழ்வதற்கு ஆதாரமாக திகழ்கின்றன.

அழகு ததும்பும் அலையாத்தி காடுகள்

சதுப்பு நில காடுகளில் உள்ள மரங்களின் வேர்கள் மண்ணை இறுக பற்றிக் கொள்வதால் கடல் சீற்றம் ஏற்படும் போது, மண் அரிப்பு ஏற்படாமல் காக்கிறது. மேலும், 80 லிருந்து 100 மைல் வேகத்தில் வீசும் புயல் காற்றை தடுத்து நிறுத்தும் வலிமையை அலையாத்தி காடுகள் பெற்றுள்ளன.முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகள்

தமிழகத்தில் பிச்சாவர காடுகளை விட, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் அமைந்துள்ளது. இவை திருவாரூர் மற்றும் தஞ்சாவூருக்கு இடையே அமைந்து இருக்கின்றது. 119 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகள். தென் இந்தியாவின் மிகப்பெரிய மாங்குரோவ் காடுகளாக இவை அறியப்படுகிறது.

காடுகளுக்கு நடுவே படகு சவாரி

பல்வேறு மாவட்டங்களில் வரும் சுற்றுலா பயணிகள் இங்கு படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். இந்த படகு சவாரி 7 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்டுள்ளது. அலையாத்தி காடுகளுக்கு நடுவே ஒரு அழகிய பயணம், மனதிற்கு அமைதியையும், கண்ணிற்கு குளிர்ச்சியையும் கொடுப்பதாக இருக்கும்.

சீப் கார்னர், வவ்வால் தோட்டம், உப்புத்தோட்டம், செல்லிமுனை பார்வை கோபுரங்கள், யாழ்பாணத்தான்கோரி, நடுவாய்க்கால் ஆகியவை இங்கு சென்றால் கட்டாயம் பார்க்க வேண்டிய பகுதிகள்.

இவ்வளவு பெரிதா?

முத்துப்பேட்டையில் கடலில் ஆறுகள் கலக்கின்றன. ஆறுகள் கடலில் கலக்கும் ஆழமற்ற பகுதி லகூன் எனக் கூறப்படுகிறது. இந்த லகூன் பகுதியில் 29,713 பரப்பளவில் முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகள் விரிந்துள்ளன. இதனைக் காண பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.காட்டுக்குள் ஒரு பயணம்

அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையில் உலகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வைகள் இங்கு வருகை தருகின்றன. சுற்றுலா பயணிகள் சிறிது தூரம் நடந்து, அலையாத்தி காடுகளுக்கு உள்ளே சென்று பார்க்கும் வகையில் 162 மீட்டர் நீளத்திற்கு நடை பாதை உருவாக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற நடைபாதை அமைப்பு பிற சதுப்பு நிலக் காடுகளில் இல்லை.

குட்டி தீவுகள்

இங்குள்ள ஏராளமான மணல் திட்டுகள் குட்டி தீவு போல காட்சியளிக்கின்றன. சுற்றுலா பயணிகள் இளைப்பாற குடில்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் வனத்துறையால் செய்யப்பட்டு உள்ளது.
இந்த இடம் ஒரு நாள் சுற்றுலாவிற்கு ஏற்ற நல்ல ஸ்பாட்டாக உள்ளது. திருவாரூர், தஞ்சை, திருச்சி, கும்பகோணம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து எளிதாக இங்கு வரலாம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments