தொண்டி அருகே திருப்பாலைக்குடியில் பாசி வளர்ப்பு பூங்கா அமைக்க மத்திய இனை அமைச்சர் எல்.முருகன் ஆய்வு


ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள கடலோர கிராமமான திருப் பாலைக்குடியில் மீன்துறை மூலம் பாசி–வளர்ப்பு பூங்கா ரூ.11 கோடிமதிப்பில் துவங் கப்பட உள்ளது.

இந்த இடத்தை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் எல்.முருகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார். அப்போது பாசி வளர்ப்பு பூங்கா பணிகள் விரைவில் தொடங்கி முடி–வ–டையும் வகையில் மேற் கொள்ள அதிகாரிக–ளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதா–கவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மீன்துறை இணை இயக்குநர் பிரபாவதி, துணை இயக்கு–நர் கோபிநாத், ஆய்வாளர் அபுதாஹிர், மீனவ கூட் டுறவு சங்கத்தலை–வர்கள் பசுருல்ஹக், சுல்த்தான் செய்யது இபுராமுசா, மீன் துறை அலுவலர்கள் முரு–கேசன், ஷகிலாபானு, நிர் மலாதேவி, தீபா உட்பட பலர் கலந்துகொன்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments