புத்தக திருவிழாவில் மாணவ-மாணவிகளுக்கான செஸ் போட்டி




புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் மாணவ-மாணவிகளுக்கான செஸ் போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். புதுக்கோட்டை சதுரங்க கழகத்தினர் போட்டியை நடத்தினர். பெரியவர்களுக்கான போட்டியில் முதலிடத்தில் ரஞ்சித், 2-ம் இடத்தில் ஜோதிகா, 3-ம் இடத்தில் ரவி ஆகியோர் வெற்றி பெற்றனர். சிறுவர்களுக்கான போட்டியில் ஜெயபிரதீபன், அரீஷ் இம்ரன், பால சதுர்த்தியன் ஆகியோர் முறையே மூன்று இடங்களில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு புத்தக திருவிழா நிறைவு விழாவில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. புத்தக திருவிழாவில் கோளரங்கத்தின் சார்பில் அறிவியல் சார்ந்த வேன் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments