மதுரை, திருச்சி வழியாக திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை ஆகஸ்ட் 6ம் தேதி துவக்கம் என தகவல்




இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள ஓர் ரயில் சேவை. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில் தற்போது 46 வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கையை விரிவாக்கும் செய்யும் முயற்சியில் இந்திய ரயில்வே மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில், சென்னைக்கு மற்றொரு பரிசாக சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை மிக விரைவில் கிடைக்க போகிறது. சென்னை - திருநெல்வேலி இடையே தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத் ரயில் சேவையை 2023 ஆகஸ்ட் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயண நேரத்தை விட இந்த வந்தே பாரத் ரயிலில் பயணிகள் 2 மணி நேரம் வரை மிச்சப்படுத்தலாம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது சென்னை-நெல்லை ரயில் 658 கி.மீ தூரத்தை 8 மணி நேரத்தில் கடக்கும். 8 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த வந்தே பஹ்ரத் ரயில் திருச்சி மற்றும் மதுரை ஆகிய இரண்டு நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். இதனிடையே, மதுரை கோட்ட மேலாளர் சேரன்மகாதேவி, கல்லூர், பாளையங்கோட்டை ஆகிய 3 ரயில் நிலையங்களில், வந்தே பாரத் ரயிலின் பராமரிப்பு வசதிக்காக சாத்தியமான இடங்களை ஆய்வு செய்தார்.

நாட்டிலேயே முதன்முறையாக 2019 ஆம் ஆண்டு டெல்லி மற்றும் வாரணாசி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருவுக்கும், சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கும் இரண்டு வந்தே பாரத் ரயில் சேவைகள் தற்போது இயக்கப்படுகின்றன.

சென்னை-நெல்லை வந்தே பாரத்


சுமார் 622 கிமீ தூரம் கொண்ட வழித்தடமான சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலுக்கு எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது. சென்னை - நெல்லை வழித்தடத்தில் என்ன மாதிரியான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட உள்ளன என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. எனினும், வி.ஐ.பி. பெட்டியில் பயணம் செய்ய தனிநபர் ஒருவருக்கு ரூ.2,800 முதல் ரூ.3,000 வரை கட்டணம் இருக்கலாம் எனவும், மற்ற பெட்டிகளில் பயணம் செய்ய தனிநபர் ஒருவருக்கு ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை வசூலிக்கப்படலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.

இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, அதிகபட்சம் எட்டு பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலே இந்த புதிய வழித்தடங்களில் இயக்க திட்டமிட்டப்பட்டுள்ளன. தேவை அதிகம் இருந்தால் மட்டும் 16 பெட்டிகள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சென்னை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்தடையும் வகையில் இயக்கப்பட உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments