மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோட்டைப்பட்டினம் பொதுநல இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம்!
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோட்டைப்பட்டினம் பொதுநல இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கடைவீதியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பொதுநல இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் சாலிஹூ, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் அபுசாலிகு ஆகியோர் தலைமை தாங்கினர். 

ஆர்ப்பாட்டத்தில் ஆவுடையார்கோவில் பங்குத்தந்தை அருளரசு, மனித நேய மக்கள் கட்சியின் மாநில பேச்சாளர் பழனி பாரூக், எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்ட தலைவர் பிலால் தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலவரத்தை தடுத்து நிறுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சுற்று வட்டார கிராம பங்கு தந்தைகள், இந்து, இஸ்லாமிய, கிறித்தவ பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். முன்னதாக கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments