புதுக்கோட்டை & விராலிமலை அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், தொழில் 4.0 திட்டத்தின் கீழ், டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து, ரூ.34.64 கோடி மதிப்பீட்டில் எந்திரங்கள், தளவாடங்களுடன் கூடிய அதிநவீன தொழில்நுட்ப மைய புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
தொடர்ந்து புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் மெர்சி ரம்யா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, உயர் தொழில்நுட்ப எந்திரங்களை பார்வையிட்டார்.
இந்த அதிநவீன தொழில்நுட்ப மையத்தில், மேனுபாக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன், இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் அண்ட் டிஜிட்டல் டெக்னீசியன் ஆகிய ஒரு வருட தொழிற்பிரிவுகளும், அட்வான்ஸ் சி.என்.சி. மெஷினிங் டெக்னீசியன், மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிகிள் ஆகிய 2 வருட தொழிற்பிரிவுகளும், ஐ.ஓ.டி, பிராசஸ் கண்ட்ரோல், ப்ராடக்ட் டிசைன், ஆட்டோ எலக்ட்ரிக் மெயின்டனன்ஸ், அட்வான்ஸ்டு பெயிண்டிங் போன்ற 23 தொழிற்பிரிவுகளில் குறுகிய கால பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது. இதுநாள் வரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், அடிப்படை தொழிற்பிரிவுகளில் மட்டுமே பயிற்சி பெற்று வந்த பயிற்சியாளர்கள் இனிவரும் காலங்களில் கூடுதலாக மேம்படுத்தப்பட்ட திறன் பயிற்சி பெறும் வகையில், இந்த அதிநவீன தொழில்நுட்ப மையம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத்அலி, மாவட்ட கருவூல அலுவலர் ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.