திருப்பாலைக்குடியில் வங்கியில் அன்றாடம் பொதுமக்கள் சந்தித்து வரும் துயரங்களை நிவர்த்தி செய்திட கோரி, வங்கி கிளை மேலாளரிடம் மக்கள் நல மன்றம்,நிர்வாகிகள் சந்தித்து மனு அளிப்பு*

இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் வங்கியில் அன்றாடம் பொதுமக்கள் சந்தித்து வரும் துயரங்களை நிவர்த்தி செய்திட கோரி, வங்கி கிளை மேலாளரிடம் மக்கள் நல மன்றம்,நிர்வாகிகள் சந்தித்து 19 ஜூலை அன்று மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியுள்ள கடிதத்தில் 

வங்கியில் அன்றாடம் பொதுமக்கள் சந்தித்து வரும் துயரங்களை நிவர்த்தி செய்திட கோகுதல் சம்பந்தமாக

நமது வங்கி கிளையில் திருப்பாலைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமத்தினர் அதிகளவில் பணப் பரிவர்த்தனை செய்து வருகின்றனர் என்பது தாங்கள் அறிந்ததே. அவ்வாறு பணம் முதலீடு,பணம் பெறுதல்,நகை அடமானம் போன்ற வேலைகளுக்கு காசாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளர் போன்ற பிரிவுகளில் பொதுமக்கள் அதிகநேரம் காத்திருக்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதுடன் ஒருநாள் பொழுதே விரயமாகிவிடுகிறது. 

பொதுமக்களுக்கு தேவையான விவரங்களை தெரிவிப்பதில் வங்கி ஊழியர்கள் கடும் அலட்சியம் செய்வதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். 

காரணம் வங்கியில் ஊழியர்கள் பற்றாக்குறையாக இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.

மேலும் புதிய வங்கிக் கணக்கு எண் துவங்கவும் நீண்ட நாட்கள் ஆகுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.மேலும் தாங்கள் வங்கியில் எழுத்தாளர் பணியிடம் காலியாக இருப்பதை அறிய முடிகிறது ஆகையால் மேற்கண்ட குறைகளை நிவர்த்திசெய்திட தங்கள் வாடிக்கையாளர்களின் நலன் கருதி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தாங்களை மக்கள் நல மன்றம் சார்பாக பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது 

*தகவல் அறிவிப்பு*

அன்பார்ந்த திருப்பாலைக்குடிப் பகுதி மக்களே,

நமதூர் சென்ட்ரல் பேங்கில் பொதுமக்கள் அன்றாடம் சந்தித்து வரும் அவலநிலைகளை வங்கிக் கிளை மேலாளரிடம் நமது மக்கள் நல மன்ற நிர்வாகிகள் மிகத் தெளிவாக எடுத்துக்கூறினர்,

வங்கிக் கிளை மேலாளரும் அதை தவறாது பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார் என்பதை அன்போடு தெரியப்படுத்திக் கொள்கின்றோம்,

குறிப்பிட்ட காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை மக்கள் நல மன்றத்தால் மேற் கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்புடன்,
நிர்வாகிகள்,
மக்கள் நல மன்றம்,
திருப்பாலைக்குடி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments