திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பொறுப்பேற்பு!





திருச்சி ரயில்வே கோட்ட மேலாளராக எம்.எஸ். அன்பழகன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற அவர் 1992 ஆம் ஆண்டு ஐஆர்எஸ்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ரயில்வே பணியில் சேர்ந்தார். 

ரயில்வே துறையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் உதவி
(மெட்டீரியல்) மேலாளராகவும்,தொடர்ந்து முதுநிலை மேலாளர் பதவியிலும், பெங்களூர் ரயில் சக்கர தொழிற்சாலையில் முதன்மை (மெட்டீரியல்) மேலாளராகவும்
பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளராக தேர்வு செய்யப்பட்ட அவர், திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தில்  பொறுப்பேற்று கொண்டார் 

துறை ரீதியான பயிற்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்காக சிங்கப்பூர் மலேசியா சென்று வந்துள்ளார்.

கோட்ட மேலாளராக பொறுப்பேற்று அவருக்கு ரயில்வே அலுவலக திருச்சி ரயில்வே அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்து
தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments