பேராவூரனி-சேதுபாவாசத்திரம் சேது சாலையில் உள்ள இரயில்வே கிராசிங் கேட்‌ பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஆகஸ்ட் 27) மூடல் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

பேராவூரனி-சேதுபாவாசத்திரம் சேது சாலையில் உள்ள இரயில்வே கிராசிங் கேட்‌ பராமரிப்பு பணி காரணமாக  (ஆகஸ்ட் 27) மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 
பராமரிப்பு பணி நடப்பதால் பேராவூரணி ரெயில்வே கேட்  (ஞாயிற்றுக்கிழமை) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பேராவூரணியில் சேதுபாவாசத்திரம் சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடக்கிறது.

இதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் ரெயில்வே கேட் மூடப்படும் என ரெயில்வே அறிவித்துள்ளது. 

 காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பேராவூரணி- சேதுபாவாசத்திரம் சாலையில் உள்ள ரெயில்வே கேட் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படும் என ரெயில்வே துறை சார்பில் அங்கு அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை அன்று பேராவூரணியில் வாரச்சந்தை நடைபெறும். மேலும் தற்போது மொய் விருந்து காலமாக இருப்பதால் அதிகமான போக்குவரத்து சேதுபாவாசத்திரம் சாலையில் இருக்கும். ஏனெனில் இந்த சாலையில் 10-க்கும் மேற்பட்ட மொய் விருந்து அரங்கங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன. 

 ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாள் என்பதால் அதிகளவில் இப்பகுதியில் போக்குவரத்து இருக்கும். இந்த நிலையில் ரெயில்வே துறையினர் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தி உள்ளனர். இந்த பாதைக்கு பதிலாக மாற்றுப்பாதையில் செல்ல 3 கிலோ மீட்டர் தூரம் சென்று நகரப் பகுதிக்குள் வர வேண்டும். 

மாற்று பாதை

27-08-2023 ஞாயிறு காலை 8.00 மணிமுதல் மாலை 6.00 மணி வரை பேராவூரனி சேது சாலை ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். எனவே மாற்று வழிகளை திட்டமிட்டு பயன்படுத்தவும். பூக்கொல்லை இருந்து பேராவூரனி செல்லும் வாகனங்கள் நட்டணிக்கோட்டை, தேரடி வழியாக மெயின் ரோடு செல்லலாம். 

பேராவூரணி இருந்து பூக்கொள்ளை செல்லும் வாகனங்கள் ஆண்டவன் கோவில் சுரங்கப்பதை வழியாக செல்லவும்.

பேராவூரணி இருந்து கழனிவாசல் செல்லும் வாகனங்கள் தேரடி சுரங்கபாதை மற்றும் கூப்பலிக்காடு ரயில்வே கேட் வழியாக செல்லவும்.

கனரக வாகனங்கள் நட்டணிக்கோட்டை சாலையாயை பயன்படுத்துவார்கள் என்பதால் இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் கழனிவாசல் ஆற்றுக்கரை, நீலகண்டபுறம் வழியாக தேரடி வழியை பயன்படுத்தவும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments