ஆவுடையார்கோயிலில் குறுவட்ட அளவிலான தடகள போட்டி!ஆவுடையார்கோயிலில் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.

ஆவுடையார்கோயில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் MLA தொடங்கி வைத்தார். ஆவுடையார்கோவில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நேற்று 25/08/2023 ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தலைமை ஏற்றார். பள்ளித்தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். 
தேசியக்கொடியை சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அவர்களும், ஒலிம்பிக் கொடியை மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களும், ஆவுடையார்கோவில் குறுவட்ட அளவிலான கொடியை பெண்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பாக்கியலட்சுமி அவர்களும் ஏற்றி வைத்தனர். பின்னர் மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அனைவரும் எழுந்து நின்று அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டனர். வீர்களிடம் இருந்து முறையாக ஒலிம்பிக் ஜோதியை ஏற்றுக்கொண்டு சட்டமன்ற உறுப்பினர் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து போட்டிகளை துவக்கி வைத்தார். விளையாட்டு போட்டிக்கான உறுதிமொழியை மணமேல்குடி ஆண்கள் பள்ளி உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார் வாசிக்க அனைத்து விளையாட்டு வீரர்களும் எடுத்துக் கொண்டனர். 
இந்நிகழ்வில் ஆவுடையார்கோவில் ஒன்றியக் குழுத் தலைவர் உமாதேவி காசிநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் KKC.இராமநாதன், புண்ணியவயல் ஒன்றியக்குழு உறுப்பினர் கரு.செந்தில்குமரன், பள்ளி துணை ஆய்வாளர் இளையராஜா, கூடலூர் முத்து, பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா, பெண்கள் உயர்நிலைப் பள்ளி PTA தலைவர் பாண்டியன், வர்த்தக சங்க தலைவர் செபாஸ்டின், வார்டு உறுப்பினர் பானுமதி, பல்வேறு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள், வழிகாட்டி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உடனுக்குடன் பதக்கங்களும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இறுதியில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments