கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், நாமக்கல் வழியாக மயிலாடுதுறை - சேலம் இடையே ஆகஸ்ட் 28 முதல் புதிய ரயில் இயக்கம்கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், நாமக்கல் வழியாக மயிலாடுதுறை - சேலம் இடையே  ஆகஸ்ட் 28 முதல் புதிய ரயில் இயக்கப்படுகிறது.

மயிலாடுதுறைஸ - திருச்சி, திருச்சி-கரூர் & கரூர்-சேலம் ஆகிய 3 பாசஞ்சர் ரெயில்களையும் ஒருங்கிணைத்து மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் அதற்காக அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கிய மயிலாடுதுறை - திருச்சி, திருச்சி  - கரூர் மற்றும் கரூர் - சேலம் ஆகிய மூன்று ரயில்களை ஒன்றிணைத்து, ஒரே எக்ஸ்பிரஸ் ரயில்  28-08-2023 திங்கட்கிழமை இன்று முதல் இயங்க உள்ளது.

வண்டி எண் - 16811/16812 மயிலாடுதுறை -  சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் 28-08-2023 இன்று முதல்   இயங்கும்.

16811 மயிலாடுதுறை - சேலம்

வண்டி எண்: 16811 மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில்  மயிலாடுதுறையில் இருந்து தினமும் காலை 6.20 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு தினமும் மதியம் 1.45 மணிக்கு சென்றடையும்.

16812 சேலம் - மயிலாடுதுறை 

மறுமார்கத்தில் வண்டி எண்: 16812 சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் 
சேலத்தில் இருந்து தினமும் மதியம் 02.05 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு தினமும் இரவு 9.45 மணிக்கு சென்றடைகிறது.

நிறுத்தங்கள் :

குத்தாலம், நரசிங்கன்பேட்டை, ஆடுதுறை, திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், கும்பகோணம், தாராசுரம், சுவாமிமலை, சுந்தரபெருமாள் கோயில், பாபநாசம், பண்டாரவடை, அய்யம்பேட்டை, பசுபதிகோவில், திட்டை, தஞ்சாவூர், ஆலங்குடி, பூதலூர், அய்யனார்புரம், சோளகம்பட்டி, தொண்டமான்பட்டி, திருவெறும்பூர், மஞ்சத்திடல், பொன்மலை, திருச்சி, திருச்சி - பாலக்கரை, திருச்சி கோட்டை, முத்தரசநல்லூர், ஜியாபுரம், எலமனூர், பெட்டவாய்த்தலை, குளித்தலை, லாலாப்பேட்டை, மகாதானபுரம், சித்தலவாய், மாயனூர், வீரராக்கியம், கரூர், வாங்கல், மோகனூர், நாமக்கல், களங்காணி, ராசிபுரம், மல்லூர்

முன்பதிவில்லா பெட்டிகள்: 10
SLR - 2
மொத்தம்: 12 பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments