தொண்டி, சோலியக்குடி ஜெட்டி பாலங்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!



தொண்டி, சோலியக்குடி ஜெட்டி பாலங்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டி மகாசக்திபுரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜெட்டி பாலம் கட்டப்பட்டது. மீனவர்கள் மீன்களை இறக்கி வைக்கவும், படகுகளை பாலம் அருகே கட்டி வைக்கவும் பயன்படுத்தப்பட்டது.

பாலம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மாலை நேரங்களில் நடை பயிற்சிக்கு பயன்படுத்தினர்.

இதுகுறித்து தொண்டியை சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆசிக் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். பாலத்தை சீரமைக்க வேண்டும். பொதுமக்கள் செல்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். விசாரணை செய்த நீதிபதிகள் தடுப்புகள் அமைத்து எச்சரிக்கை போர்டு வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. இதே போல் தொண்டி அருகே சோலியக்குடி ஜெட்டி பாலத்தில் நடந்து சென்ற இடத்தில் பெரிய ஓட்டை ஏற்பட்டு நாளுக்கு நாள் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

மக்கள் கூறுகையில், நீதிமன்றம் உத்தரவிட்டு பல மாதங்கள் ஆகியும் பாலத்தை சீரமைக்கவில்லை. தொண்டி, சோலியக்குடி ஜெட்டி பாலம் பொழுது போக்கும் இடமாக உள்ளது. இரு பாலங்களையும் விரைவில் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments