வேளாங்கண்ணி மாதா தேவாலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 28.08.2023 முதல் 09.09.2023 வரை பல நகரங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் அறிவிப்பு






வேளாங்கண்ணி மாதா தேவாலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 28.08.2023 முதல் 09.09.2023 வரை பல நகரங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 




வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா 2023-ஐ முன்னிட்டு 28.08.2023 முதல் 09.09.2023 வரை சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதாகோவில், ஒரியூர், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம், நாகூர் காரைக்கால் ஆகிய முக்கிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கும் அதே போன்று மேற்கண்ட ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் திரும்ப செல்ல வேளாங்கண்ணியிலிருந்தும் 28.08.2023 முதல் 09.09.2023 வரை இரவு / பகல் எந்நேரமும் சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிட்),கும்பகோணம் சார்பாக இயக்கப்பட உள்ளது.

மேலும் மேற்படி அனைத்து ஊர்களின் பேருந்து நிலையங்களிலும், வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலும் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சேவை மையங்களில் சிறப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிய உள்ளனர்.

எனவே இச்சிறப்பு பேருந்து சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments