கோபாலப்பட்டிணத்தில் சுற்றி திரியும் வண்டி மாடு!கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக மாட்டு வண்டி மாடு ஒன்று சுற்றி திரிகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில்  கடந்த சில நாட்களாக மாட்டு வண்டிற்கு பயன்படுத்தக்கூடிய பெரிய கொம்பு கொண்ட மாடு ஒன்று சுற்றித் திரிகிறது. 

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில்,

கடந்த சில நாட்களாக வண்டி மாட்டிற்கு பயன்படுத்தப்படும் மாடு ஒன்று இங்கு சுற்றித் திரிகிறது. மாட்டின் உரிமையாளர்கள் யார் என்று தெரியவில்லை.   

பெரிய கொம்புடைய மாடு சுற்றி திரிவதால் குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே மாட்டின் உரிமையாளர்கள் உடனடியாக அழைத்து செல்லுமாறு அப்பகுதி மக்கள் கூறினார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பள்ளி முடிந்து தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு குழந்தையை மாடு முட்டி தூக்கியது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments