ஆவுடையார்கோவில் அரசு பள்ளி மாணவிக்கு காமராஜர் விருது
2021-22-ம் கல்வி ஆண்டில் கல்வியிலும், கல்வி இணை செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கியமைக்காக ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யதர்ஷினிக்கு தமிழக அரசின் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கப்பட்டது. இதற்கான சான்றிதழும், ரூ.20 ஆயிரத்திற்கான காசோலையையும் மாவட்ட கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் வழங்கினர். இந்த விருதினை பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் மாணவி திவ்யதர்ஷினிக்கு வழங்கினார். இந்நிகழ்வில் உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விருது பெற்ற மாணவிக்கு பள்ளியின் சார்பிலும், பள்ளி மேலாண்மை குழு சார்பிலும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments