S.P பட்டினம் - தொண்டி கிழக்கு கடற்கரை சாலை சேதம் - வாகன ஓட்டிகள் அவதி




தொண்டி கிழக்கு கடற்கரை சாலை அதிகமான போக்குவரத்து மிகுந்த சாலை. திருச்செந்துார், நாகூர், நாகபட்டினம், ராமேஸ்வரம், துாத்துகுடி, கன்னியாகுமரி போன்ற முக்கிய நகரங்களுக்கு இந்த வழியாக செல்வதால் தினமும் பல்லாயிரம் வாகனங்கள் இச் சாலையில் செல்கின்றன.

கடற்கரை பகுதியாக இருப்பதால் கேரளா போன்ற வெளி மாநிலத்தை சேர்ந்த மீன் கம்பெனி லாரிகளால் 24 மணி நேரமும் அதிகமான போக்குவரத்து காணப்படும். தொண்டியிலிருந்து எஸ்.பி.பட்டினம் செல்லும் சாலையில் தீர்த்தாண்டதானம், வட்டாணம், பாசிபட்டினம், கொடிப்பங்கு போன்ற பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளன.

இதனால் இரவில் டூவீலர்களில் செல்பவர்கள் விழுந்து காயமடைகின்றனர். கடந்த சில நாட்களாக கட்டுபாட்டை இழந்து வாகனங்கள் சாலையில் கவிழ்வதும் அடிக்கடி நடக்கிறது. இதனாலும் சாலை சேதமடைகிறது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments