மணமேல்குடி ஒன்றியத்தில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கும்கூட்டம்
மணமேல்குடி ஒன்றியத்தில்   அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மற்றும்  பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கும்கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் மணமேல்குடி ஒன்றியத்தில் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் மற்றும் அனைத்து பள்ளி மேலாண்மை குழு தலைவர்களுக்கும் நடைபெற்ற 
இக்கூட்டத்தினை வட்டார கல்வி அலுவலர்  திரு.செழியன்  அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி இந்திராணி அவர்கள் மற்றும் மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்திற்கு கனரா வங்கியின் மூலம் கணக்கு எண் தொடங்கப்பட வேண்டும் என்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் பள்ளியின் அடிப்படை கட்டமைப்புகள், மாணவர்களுக்கு தேவைப்படும் கழிவறை வசதிகள், வகுப்பறை வசதிகள், குடிநீர் வசதி மற்றும் சத்துணவு தரம் போன்ற செயல்பாடுகளை குறித்த தகவல்களையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதேபோல் தங்களுடைய பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. 

தற்போது பயன்பாட்டில் உள்ள கழிப்பறைகள் எண்ணிக்கை மற்றும் தேவைப்படும் எண்ணிக்கை, அதேபோல பராமரிப்பு செய்ய வேண்டிய கழிப்பறை எண்ணிக்கைகள் போன்ற தகவல்கள் அனைத்து தலைமை ஆசிரியரகளிடமும் பள்ளி மேலாண்மை குழு தலைவர்களிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேலுச்சாமி அங்கையற்கண்ணி  கணக்காளர் கலைச்செல்வன் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் கலந்து கொண்டனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments