அதிராம்பட்டினத்தில் இரயில் பயணிகள் நலச் சங்கம் நடத்திய கிழக்கு கடற்கரை இரயில் பயணிகளின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்:




அதிராம்பட்டினத்தில் இரயில் பயணிகள் நலச் சங்கம் நடத்திய கிழக்கு கடற்கரை இரயில் பயணிகளின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது 

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ECR- டெல்டா ரயில் பயணிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம்  02.08.2023 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள ரயில் பயணிகளின் பல்வேறு தேவைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்ட பின்னர்.
 
சங்கங்களின் பங்கேற்பாளர்கள் வெளிப்படுத்திய அனைத்து உண்மையான கோரிக்கைகளையும் ஏற்று பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.


தீர்மானங்கள்;

1. திருவாரூர் - காரைக்குடி 149 கி.மீ இரயில் வழித்தடத்தை மின்மயமாக்க இந்திய இரயில்வே வாரியம் ஒப்புதல்
வழங்கியுள்ளதற்கு கிழக்கு கடற்கரை இரயில் பயணிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் இச்செயற்குழு நன்றி
தெரிவித்துக் கொள்கிறது.

2. அதிராம்பட்டினம் ரயில் நிலையம் அவ்வூரில் வசிப்பவர்களுக்கு மட்டுமின்றி அந்த பகுதியைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கும் சேவை செய்யும் ஒரு முக்கியமான நிலையமாக கருதப்படுகிறது. எனவே, ரயில் பயணிகளின் வசதிக்காக, காரைக்குடி-திருவாரூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களையும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்த இந்திய இரயில்வேதுறை மற்றும் தென்னக இரயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

3. தற்போது ரயில் எண் 20683 & 20684 தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படுகிறது.
இந்த எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் இயக்க வேண்டுமெனவும், மேலும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் பின்வரும்
நிலையங்களான அதிராம்பட்டினம், பேராவூரணி, சிவகங்கை மற்றும் மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்ல இந்திய இரயில்வேதுறை மற்றும் தென்னக இரயில்வே அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

4. மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட காரைக்குடி சென்னை எழும்பூர் கம்பன்விரைவு இரயிவை மீண்டும் இயக்கப்பட வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

5. வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வரும் ஏர்ணாகுளம் வேளாங்கண்ணி இரயிலை வாரமிருமுறை நிரந்தரமாக இயக்கிட வேண்டும் எனவும், சிறப்பு இரயிலாக இயங்கிக் கொண்டு செக்கந்தராபாத் - இராமேஸ்வரம் விரைவு இரயிலை நிரந்திரமாக இயக்க வேண்டுமெனவும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

6. திருச்சிராப்பள்ளி சந்திப்பில் இருந்து தினமும் இரவு 10:50 மணிக்கு கோயம்புத்தூர் செல்லும் "செம்மொழி
எக்ஸ்பிரஸ்" (இரயில் எண். 16615/16616) உடன் இணைக்கும் வகையில் ஏசி மற்றும் ஸ்லீப்பர் கோச்சுகள் கொண்ட இரயிலை தினமும் காரைக்குடி சந்திப்பில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு இயக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

7. தற்போது அதிராம்பட்டினம் இரயில் நிலையத்தில் உன்ன நடைமேடை இரயில் பயணிகள் பயன்பாட்டிற்கு போதுமானதாக இல்லை என்பதை கவனத்தில் கொள்வதுடன். பொதுவாக ECR-டெல்டா பகுதிகளில் இயங்கி வருகிற அனைத்து இரயில் நிலையங்களிலும் நடைமேடை நீலத்தை அதகரித்திட வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது

8. ECR-டெல்டா பகுதிகளில் இயங்கி வருகிற அனைத்து இரயில் நிலையங்களிலும் பொதுவாக காலத்திற்கு ஏற்றால் போல் நவீன வசதிகளை அதாவது இரயில் பாதைகளை அதிகரிப்பது, சிற்றுண்டி நிலையங்கள் ஏற்படுத்துவது. சுய தேவைகளை பூர்த்தி செய்வதறற்கு ஏற்ற கழிவறைகளை அதிகரிப்பது போன்ற அடிப்படை வசதிகளை மேன்படுத்த இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments