புதுக்கோட்டையில் கைதிகளுக்காக புத்தகங்கள் வழங்கிய பார்வையற்ற மாணவ-மாணவிகள்
புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் `கூண்டுக்குள் வானம்' எனும் அரங்கு சிறைத்துறையினரால் வைக்கப்பட்டுள்ளது. இதில் சிறைகளில் உள்ள கைதிகள் வாசிப்பதற்காக புத்தகங்களை பரிசாக பொதுமக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் சிறை கைதிகளுக்காக பொதுமக்கள் பலர் புத்தகங்களை வழங்கி வருகின்றனர். இதுவரை 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் பள்ளி சார்பில் பணத்துடன் புத்தக திருவிழாவில் புத்தகங்கள் வாங்கி, அதனை கைதிகளுக்காக பரிசாக சிறைத்துறை அரங்கில் வழங்கினர். இதில் ரூ.4 ஆயிரம் வரையிலான புத்தகங்கள் வழங்கப்பட்டதாக பள்ளி தரப்பில் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments