கீரனூர் ரயில் நிலையத்தில் நடைமேடை உயர்த்துதல் பணிகள் காரணமாக செப்டம்பர்-6 வரை விருதுநகர் - காரைக்குடி - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுக்கோட்டை வரும் நேரம் மாற்றம்




கீரனூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் நடைமேடை-2 உயர்த்துதல் பணிகள் காரணமாக 24/07/23 முதல் 06/09/23 வரை, சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது 

1.விருதுநகர் - காரைக்குடி  - புதுக்கோட்டை

வண்டி எண் -06888/விருதுநகர் - காரைக்குடி - திருச்சி ரயில்(ஞாயி்று தவிர), காரைக்குடியிலிருந்து 25 நிமிடங்கள் தாமதமாக காலை 10:05 க்கு புறப்படும். இந்த ரயில் புதுக்கோட்டைக்கு காலை 10:44 மணிக்கு வந்து 10:45 மணிக்கு புறப்பட்டு(வழக்கமான நேரம் காலை 10:22 மணிக்கு வந்து 10:23 புறப்படும்) திருச்சிக்கு 5 நிமிடங்கள் தாமதமாக காலை 11:35 மணிக்கு செல்லும் என்ற எதிர்பார்க்கபடுகிறது.

06888/86 விருதுநகர் - காரைக்குடி - திருச்சி ரயில் (ஞாயிறு தவிர),   கீரனூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் நடைமேடை பணிகள் காரணமாக, செப் 06, 2023 வரை புதுக்கோட்டையிலிருந்து காலை 10:44 மணிக்கு வந்து 10:45 மணிக்கு புறப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்!

இந்த ரயில் விருதுநகரிலிருந்து காலை 06:20 மணிக்கு புறப்படும் காரைக்குடி சந்திப்பிற்கு காலை 09:40 மணிக்கு வந்த பிறகு 25 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு காலை 10:05 மணிக்கு புறப்படும்.

திருச்சியிலிருந்து மதியம் தினசரி 01:00 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன் ரயிலில் கோவை, திருப்பூர், ஊத்துகுளி, பீளமேடு,  ஈரோடு, கொடுமுடி, புகளூர், கருர், குளித்தலை செல்ல இந்த விருதுநகர் - திருச்சி இரயில் திருச்சியில் இணைப்பு கொடுக்கும். புதுக்கோட்டை யிலிருந்து நேரடியாக முன்பதிவில்லா டிக்கெட் மேற்கண்ட பகுதிகளுக்கு எடுத்து திருச்சி சென்று பாலக்காடு ரயில் மாறி செல்லலாம்! அவ்வாறு நேரடி டிக்கெட் பெறும்போது ₹20 குறைவு! மேலும் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் வருவாயும் உயரும்.

குறிப்பு: இந்த ரயில் வழக்கமாக புதுக்கோட்டைக்கு காலை 10:22 மணிக்கு வந்து 10:23 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

2. மானாமதுரை  - புதுக்கோட்டை

அதே போல  வண்டி எண்: 06830/ மானாமதுரை - திருச்சி டெமு ரயில், மானாமதுரை சந்திப்பிலிருந்து 15 நிமிடங்கள் தாமதமாக மதியம் 02:30 மணிக்கு புறப்படும். இருப்பினும் இந்த ரயில் புதுக்கோட்டை வந்து புறப்படும் நேரத்தில் எந்த மாற்றமுமில்லை.

Pc News Credit : Pudukottai Rail Users 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments