சிலம்பு , பொதிகை SF எக்ஸ்பிரஸ் ரயில்கள் 01-10-2023 முதல் முழுவதும் மின்சார லோக்கோ மூலம் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு


 சிலம்பு பொதிகை SF எக்ஸ்பிரஸ் ரயில் 01-10-2023 முதல் முழுவதும் மின்சார லோக்கோ மூலம் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

சிலம்பு எக்ஸ்பிரஸ்  (வாரம் மும்முறை)

வரும் அக்டோபர் 01, 2023 முதல் திருச்சி புதுக்கோட்டை காரைக்குடி சிவகங்கை மானாமதுரை அருப்புக்கோட்டை விருதுநகர் வழியாக இயங்கிவரும் சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு அதி விரைவு வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரயில் முழுவதும் மின்சார லோக்கோ கொண்டு இயக்கப்படும் என்று அறிவிப்பு! 

இதன் மூலம் இந்த ரயில் பயண நேரம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. இது அக்டோபர் 01 முதல் மாற்றியமைக்கப்படவுள்ள புதிய ரயில் கால அட்டவணையில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த ரயில் சென்னை எழும்பூர் - விருதுநகர் வரை மின்சார லோக்கோ கொண்டும், விருதுநகர் - செங்கோட்டை வரை டீசல் லோக்கோ கொண்டும் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலம்பு வழித்தடம்  (TPJ, KKDI, MNM, VPT)

சென்னை எழும்பூர்
தாம்பரம்
செங்கல்பட்டு 
விழுப்புரம்
விருத்தாச்சலம்
திருச்சி
புதுக்கோட்டை 
காரைக்குடி
சிவகங்கை
மானாமதுரை
அருப்புக்கோட்டை 
விருதுநகர்
சிவகாசி
ஸ்ரீவில்லிபுத்தூர்
இராஜபாளையம்
சங்கரன்கோவில்
கடையநல்லூர்
தென்காசி
செங்கோட்டை 

பொதிகை எக்ஸ்பிரஸ்  (தினசரி)

வரும் அக்டோபர் 01, 2023 முதல் திருச்சி திண்டுக்கல் மதுரை  விருதுநகர் வழியாக இயங்கிவரும் சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை அதி விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் முழுவதும் மின்சார லோக்கோ கொண்டு இயக்கப்படும் என்று அறிவிப்பு! 

இதன் மூலம் இந்த ரயில் பயண நேரம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. இது அக்டோபர் 01 முதல் மாற்றியமைக்கப்படவுள்ள புதிய ரயில் கால அட்டவணையில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த ரயில் சென்னை எழும்பூர் - மதுரை வரை மின்சார லோக்கோ கொண்டும், மதுரை - செங்கோட்டை வரை டீசல் லோக்கோ கொண்டும் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதிகை வழித்தடம் (TPJ, DG, MDU, VPT)

சென்னை எழும்பூர்
தாம்பரம்
செங்கல்பட்டு 
விழுப்புரம்
விருத்தாச்சலம்
திருச்சி
திண்டுக்கல்
மதுரை
விருதுநகர்
சிவகாசி
ஸ்ரீவில்லிபுத்தூர்
இராஜபாளையம்
சங்கரன்கோவில்
கடையநல்லூர்
தென்காசி
செங்கோட்டை 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments