பட்டுக்கோட்டையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள்






தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில்  புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் பட்டுக்கோட்டை நகருக்கு வருகின்றனர். பட்டுக்கோட்டை நகரில் தற்போதுள்ள பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 450 பஸ்கள் வந்து செல்கின்றன. ஆனால் பஸ்கள் வந்து செல்லவும், பயணிகள் காத்திருக்கவும் போதுமான இடவசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் பல ஆண்டுகளாக பொதுமக்களும், பயணிகளும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர்மன்ற தலைவர்களுக்கு புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் அனுப்பி வந்தனர்.
  
அதையடுத்து தற்போதைய நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா, நகர்மன்ற கூட்டத்தில் பட்டுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் என்று தீர்மானம் நிறைவேற்றி அப்போதிய மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி இருந்தார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், இடம் தேர்வு செய்யப்பட்டு பேருந்து நிலையம்,  திட்ட மதிப்பீடு தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது. 

அதையடுத்து பட்டுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் ரூ.20 கோடி செலவிலும்,  அமைக்க தமிழகஅரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில்  கடந்த ஜூன் 17 காலை 10 மணியளவில் ரூ. 20 கோடி செலவில்  புதிய பேருந்து நிலையம்  நரியம் பாளையத்தில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது . அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர்கள் அதிகாரிகள் பல்வேறு அரசியல் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ..

தற்போது பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில்   கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக  நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிந்து செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது 
.




Photos Credit : Nama Pattukottai 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments