தாட்கோ மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் தொழில்நுட்ப பயிற்சி கலெக்டர் தகவல்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அனிமேஷன் மற்றும் டேலி போன்ற பயிற்சிகள் தாட்கோ மூலமாக வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியினை பெற 12-ம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

 இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள தாட்கா மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம் என கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments