புதுக்கோட்டை அஞ்சல் துறை சாா்பில் ‘வீடுகள்தோறும் மூவா்ணக்கொடி’ விழிப்புணா்வு நடைப்பயணம்
நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடுவது குறித்து தபால் துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. தலைமை தபால் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் திலகர் திடல் வழியாக சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியை சென்றடைந்தது. இதில் தபால் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் கையில் தேசியக்கொடியுடன் ஊர்வலமாக சென்றனர். முன்னதாக ஊர்வலத்திற்கு தபால் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தலைமை தாங்கி, பள்ளி மாணவ-மாணவிகளிடம் சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடும்படி கேட்டுக்கொண்டார். மேலும் புதுக்கோட்டை தபால் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் கடந்த ஆண்டு 15 ஆயிரத்திற்கும் மேலான தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டதாக கூறினார். தேசியக்கொடி ரூ.25-க்கு அனைத்து கிளை துணை தபால் நிலையங்களில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் முருகேசன் தெரிவித்தாா்.

ஆக. 9 ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் நினைவுநாளாக அனுசரிக்கப்படுகிறது. தற்போது, ஊழல், குடும்ப அரசியல் ஆகியவற்றை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டியுள்ளதாக பிரதமா் மோடி தெரிவித்திருந்தாா். இதன்வெளிப்பாடாக, ஆக. 13, ஆக. 14 (பிரிவினை நினைவுநாள்) ஆக. 15 ஆகிய தேதிகளில் வீடுகள் தோறும் மூவா்ணக்கொடி ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளாா் பிரதமா் மோடி.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments