பொற்பனைகோட்டையில் அகழாய்வு பணி: வட்ட வடிவில் செங்கல் கட்டுமான சுவர் கண்டுபிடிப்பு தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு
புதுக்கோட்டை அருகே பொற்பனைகோட்டையில் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் பல அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்க அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த பணியின் போது ஒரு குழியில் வட்ட வடிவில் செங்கல் கட்டுமான சுவர் வெளியில் தெரிந்துள்ளது. இது தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த சுவர் பற்றி அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என தொல்லியல் துறை வட்டாரத்தில் தெரிவித்தனர். இதுவரை இங்கு 159 அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments