சென்னை எழும்பூர் - காரைக்குடி இடையே தினசரி ரயில் இயக்க வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் சங்கம் & காரைக்குடி தொழில் வணிக கழகம் சார்பில் மக்களவை உறுப்பினர்‌‌கள் மூலமாக மத்திய ரயில்வே அமைச்சரிடம் மனு அளித்தனர்




காரைக்குடி- திருவாரூா் பாதையில் சென்னைக்கு புதிய ரயில் விட வேண்டும் என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வின் வைஷ்ணவிடம் புதன்கிழமை மனு அளித்தாா்.

இதுகுறித்து காரைக்குடியில் உள்ள காா்த்தி சிதம்பரத்தின் எம்.பி அலுவலகத்திலிருந்து வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

சிவகங்கை மாவட்டம், கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் சங்கத்தினா், காரைக்குடி தொழில் வணிகக் கழக நிா்வாகிகள் ஆகியோா் சாா்பில் ரயில்வே துறையின் அவசிய தேவைகள் குறித்த பொதுவான கோரிக்கைகள் அடங்கிய மனு பெறப்பட்டு, மத்திய ரயில்வேத் துறை அமைச்சா் அஸ்வின் வைஷ்ணவிடம், சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் வழங்கி நிறைவேற்ற கேட்டுக் கொண்டாா்.

இந்த நிகழ்வில், திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினா் திருநாவுக்கரசா், காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, பொருளாளா் கே.என். சரவணன், கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியன், பேராவூரணி பன்னீா்செல்வம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

காரைக்குடி- திருவாரூா் பாதையில் சென்னை எழும்பூருக்கு புதிய ரயில் விட வேண்டும். இந்த வழித்தடத்தில் செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் பேராவூரணி, அதிராம்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும். 

காரைக்குடி ரயில் நிலையத்தில் புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும். 

மயிலாடுதுறை- திருவாரூா்- காரைக்குடி- மானாமதுரை வழியாக மதுரைக்கு புதிய ரயில் விட வேண்டும். 

நிறுத்தப்பட்ட கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.

காரைக்குடியிலிருந்து மதுரைக்கு திருப்பத்தூா், மேலூா் வழியாக புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். 

புதிதாக இயக்கப்படும் தாம்பரம்- செங்கோட்டை ரயில் திருவாரூா் வழியாக இயங்கும் நிலையில், அதிராம்பட்டினம், பேராவூரணி ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும். 

மயிலாடுதுறையிலிருந்து சென்னை செல்லும் சோழன் விரைவு ரயிலுக்கு காரைக்குடி, திருவாரூா் வழியில் புதிய இணைப்பு ரயில்களை இயக்க வேண்டும்.

ராமேசுவரம் - கோயம்புத்தூா் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும். மேலும் 

கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி பழன, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருவாரூா், நாகப்பட்டினம் அல்லது நாகூா் வரையிலும் விரைவு ரயில் இயக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிராம்பட்டினத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்லவேண்டும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் டிக்கட் முன்பதிவு கவுண்டர் திரக்கவேண்டும் - மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை.

திருவாரூர்~ காரைக்குடி இடையே அகல ரெயில்பாதை பணிக்காக, சென்னையிலிருந்து மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக காரைக்குடி வரையில் மீட்டர் கேஜ் பாதையில் இயங்கி வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 2006 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

அதிராம்பட்டினம் வழியாக காரைக்குடி யில் இருந்து  சென்னைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மீண்டும் தொடங்க  உத்தரவிடக்கோரியும், அதிராம்பட்டினத்தில் முன்பதிவு கவுண்டர் திறக்க வேண்டியும் ரெயில்வே மந்திரி  அஸ்வின் வைஸ்னவ் , ரயில்வே சேர்மன் அவர்களிடம் அதிராம்பட்டினம் ரயில்வே பயணிகள் நலச் சங்க தலைவர்  எம்.எஸ்.ஷிஹாபுதீன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பழனிமாணிக்கம், கார்திக் சிதம்பரம், மற்றும் இந்த வழித்தடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

அப்போது கிழக்கு கடற்கரை இரயில் பயணிகள் கூட்டமைப்பு  பிரஸிடெண்ட் சாமிதிராவிடமணி  கோஆர்டினேட்டர் எஸ்,ஆர்,எம்,பாலசுப்பிரமணியன். வைஸ்பிரஸிடெண்ட். எம்,எஸ்,ஷிஹாபுதீன் டிரஸரர் கே,என்,சரவணன் எக்ஸ்கியூட்டிவ் உறுப்பினர் அப்துல்ரஜாக், பன்னீர்செல்வம் பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் தலைவர் ஜெயராமன் ஆகியோர்  இருந்தனர்

இரயில் நிலைய ஊர்களின் நிறைவேற்றப்படவேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை  மத்தியஅரசின் இரயில்வேதுறை அமைச்சர் அவர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் .சு.திருநாவுக்ககரசர் கார்த்தி. ப.சிதம்பரம் ஆகியோர் இணைந்து  9.8.2023. டில்லி பார்லிமெண்ட் அலுவலகத்தில் அமைச்சர் அவர்களிடம் கொடுத்தனர் மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் மனு மீது விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments