கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் குளிர்வித்த மழை




கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில்     மழை பெய்தது 

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது இருந்தது 
 
கோடை காலம் முடிந்த பின்பும் வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்து வருகிறது. பகலில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தாலும் ஒரு சில நாட்களில் இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில்    ஆகஸ்ட் 11 வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில்  திடீரென  வானில் கருமேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசியது. இதைத்தொடர்ந்து  9.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கி அரை மணிநேரம் வரை மழை பெய்தது  

இதனால் வெப்பம் ஒரளவு தணிந்து குளிர்ந்த காற்று வீசியது .

மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments