புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்படி ஒரு இடமா..? கடற்கரை பகுதிக்கு போயிருக்கீங்களா..? -
கோடியக்கரை 

மணமேல்குடி பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே ஒரு தார் சாலை செல்கிறது. அந்தப் பாதையில் சென்றால்சிறிது தூரத்தில் முந்திரி, தைலமரக்காடுகள் நம் கண்ணிற்குத் தென்படுகின்றன.

அப்படியேசற்றுதூரத்தைக் கடந்து சென்றால் குளிர்ந்த கடற்கரை காற்று உங்களை வரவேற்கும். புதுக்கோட்டையில் ஒரு சுற்றுலா தலமாக இந்த மணமேல்குடி, கோடியக்கரை, மீமிசல், கோட்டைப் பட்டிணம் ஆகியவை அமைந்துள்ளது.

இந்த கோடியக்கரை பகுதிக்குள் நுழையும்போதே நூற்றுக்கணக்கான மீனவர்கள் நாட்டுப்படகில் மீன் பிடிக்கச் செல்லும் காட்சி கண்களை கவரும் வகையில் இருக்கும். இயற்கைக் காற்றினை சுவாசித்தவாறு தொடர்ந்து சென்றால், கடற்கரையின் ஓரத்தில் அமர்ந்தவாறு மீனவர்கள் வலைகளைப் பிரித்தெடுத்தடுத்தல், படகினைத் தயார்ப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கடற்கரையையொட்டி விநாயகர் கோவில் ஒன்று இருக்கிறது. கடற்கரையில் பெரிய அலைகள் இல்லையென்றாலும் கூடஅலைகள் நமது காலை வருடிச் செல்கின்றன.

இங்கு அதிகாலையிலிருந்து காலை 10 மணி வரையிலும் தரமான மீன்கள் இங்கு விற்பனைக்குக் கிடைக்கின்றன. கடற்கரையையொட்டி சுமார் 5 கி.மீ தொலைவிற்கு தீவு போன்று இயற்கையாகவே அமைந்த அலையாத்தி காடுகளும் அமைந்திருக்கிறது.

முத்துக்குடா 

மணமேல்குடியைக் கடந்து கோட்டைப்பட்டினம், மீமிசல் வழியாகக் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகவே சென்றால் முத்துக்குடா பேருந்து நிறுத்தம் வருகிறது. அங்கிருந்து உள்ளே ஒரு கிலோ மீட்டர் தூரம் கடந்ததும் முத்துக்குடா என்ற அழகிய கடற்கரை கிராமம் நம் கண்ணுக்குத் தென்படுகிறது.

முழுவதும் மீனவ கிராமம். இங்குள்ள மீனவர்கள் பெரும்பாலும் நாட்டுப்படகுகளைப் பயன்படுத்தி கடலுக்குள் சென்று மீன் பிடி தொழிலைச் செய்து வருகின்றனர். இப்பகுதி பெண்கள் வலைகளைச் சரிசெய்வது உள்ளிட்ட உதவிகளைச் செய்கின்றனர்.

மேலும் கடலுக்கு நடுவே சில இடங்களில் மணல் திட்டுக்கள் அமைந்திருக்கின்றன.அலையாத்திக் காடுகளைக் கண்டு ரசிக்கும் சுற்றுலாப்பயணிகள் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்கும் இடமாகவும் இவை விளங்குகின்றன.

கடலுக்கு நடுவே படகில் செல்லும்போது மீன்கள் துள்ளிக் குதித்து விளையாடுவதையும், கால்வாய் ஓரங்களில் மரம் செடி கொடிகளில் நண்டுகளையும் நாம் கண்டு ரசிக்கலாம்


News Credit : News 18 Tamilnadu 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments