அமரடக்கியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு




அமரடக்கி அரசு உயர்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது..

புதுக்கோட்டை மாவட்டம் , ஆவுடையார்கோவில் ஒன்றியம் அமரடக்கி அரசு உயர்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில்படி மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா உத்தரவின்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா அவர்களின் ஆலோசனையின்படி  அமரடக்கி உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழியேற்பில் போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன்,நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன், மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்,போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை முழுமையாகத் தருவேன், போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, நடவடிக்கைகளின் மூலம் போதைப் தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் பொருட்களை துணைநிற்பேன்,
மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் உறுதிகூறுகிறேன். பங்காற்றுவேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதில் அப்பள்ளி தலைமை ஆசிரியர் பா.சுந்தரபாண்டியன் தலைமையில்
ஆசிரியர்கள்,
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
சமூக ஆர்வலர் 
ஆ.சே. கலைபிரபு
அமரடக்கி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments