முத்துக்குடா காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்
முத்துக்குடா  காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா முத்துக்குடா மேலத்தெருவில் ஈச்சமரத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

இதில் தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 75 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பெரியமாடு, சின்னமாடு, புது பூட்டு ஆகிய 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது.

பரிசு

மாட்டு வண்டிகள் எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரூ.2 லட்சம், கேடயம் வழங்கப்பட்டது. சாலையில் இருபுறமும் நின்று பந்தயத்தை ரசிகர்கள் கண்டு களித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments