பட்டுக்கோட்டையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 11 வழக்குகளுக்கு தீர்வு;2 கோடி வசூல்
பட்டுக்கோட்டையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 11 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2 கோடி வசூல் செய்யப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

பட்டுக்கோட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பட்டுக்கோட்டை வட்ட சட்டப் பணிகள் குழுவின் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பு நீதிபதி ஏ.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி டி.வி. மணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.ரவிச்சந்திரன், நீதித்துறை நடுவர் கே.சத்யா, மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் என்.அழகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

11 வழக்குகளுக்கு தீர்வு

2 அமர்வாக பிரிக்கப்பட்டு 146 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 11 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2 கோடியே 9 லட்சத்து 65 ஆயிரத்து 510 வசூல் செய்யப்பட்டது.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது.சிறப்பு நீதிமன்றத்தில் வக்கீல்கள் சங்கத் தலைவர் ஆ.மாஸ்கோ மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இளநிலை நிர்வாக உதவியாளர் பிரசன்னா, வட்ட சட்ட பணிகள் குழு சட்ட பணியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்து இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments