தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலங்குடி கிளை சார்பாக 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலங்குடி கிளை சார்பாக 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட ஆலங்குடி கிளை மற்றும் புதுகை அரசு மருத்துக்கல்லூரி இணைந்து 9-வது மாபெரும் இரத்ததானம் முகாம் பாரதி நகரில் உள்ள TNTJ கிளை அலுவலகத்தில் 13/08/2023 அன்று நடைபெற்றது.இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் முகமது மீரான் தலைமை வகித்தார். கிளை நிர்வாகிகள் முகம்மது அலி, இப்ராஹிம் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் ஆலங்குடி மற்றும் கலிப்புல்லா நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும்,பெண்களும் ஆர்வமாக கலந்து கொண்டு 28 யூனிட்கள் குருதி கொடையாக வழங்கினார்கள். இதில் மாவட்ட மருத்துவ அணிசெயலாளர் சபியுல்லா நன்றியுரை வழங்கும்போது "ஒரு மனிதரை வாழவைத்தவர் உலக மனிதர் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்" என்ற குர்ஆனின் போதனையின் அடிப்படையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில், பங்களிப்பு செய்த இரத்த கொடையாளர்களுக்கும் மற்றும் இரத்த வங்கி மேலாளர் டாக்டர்.கிஷோர் குமார் மற்றும் அவரது குழுவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். 
இதில் கலந்து கொண்டு ரத்தம் வழங்கிய அனைவருக்கும் அரசு பாராட்டு சான்றிதழ் டாக்டர் கிஷோர் குமார் அவர்கள் வழங்கினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments