108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்!புதுக்கோட்டை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை திலகர் திடல் அருகில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், பெண் தொழிலாளர்களை இழிவாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வரும் EMRI-GHS அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு, தொடர்ந்து இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 108 ஆம்புலன்ஸ்களை 24×7 இயக்கிடு, சட்ட விரோத பணியிட மாறுதலை தடுத்து நிறுத்திடு, சட்டப்படியான 8 மணி நேர வேலை வழங்கிடு,

ஓட்டுநர்களை மட்டும் காரணம் காட்டி ஒரு குறிப்பிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு மட்டுமே தண்டனை வழங்கும் EMRI - GHS நிர்வாகத்தின் சட்ட விரோத நடிவடிக்கையை கைவிட நடவடிக்கை எடு, பெண் தொழிலாளர்களை தாய்மையை இழிவுபடுத்தி அநாகரீகமாக பேசியும், தனது அதிகாரத்தை நிலைநாட்ட 108 ஆம்புலன்ஸ்களை தவறாக பயன்படுத்தும் புதுக்கோட்டை மாவட்ட EMRI - GHS நிர்வாக அதிகாரி (EME) மீது நடவடிக்கை எடு, தமிழ்நாடு அரசு 1948 தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 65A திருத்தம் திரும்பப் பெறப்பட்ட பிறகும், சட்ட விரோதமாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 12 மணி நேர பணி வழங்கி வரும் EMRI - GHS நிறுவனத்தின் சட்ட விரோத நடவடிக்கையை கைவிட செய்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர பணி வழங்க கோரி நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் கண்டன உரையாற்றினார்.

இதில் பங்கேற்ற தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தும், ஜி.வி.கே-இ.எம்.ஆர்.ஐ., நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments