மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி தொடக்கம்
மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியதிற்க்கு உட்பட்ட பள்ளிகளில் பள்ளியில் சேராமல்   உள்ள மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணி தொடங்கியது.

இந்நிகழ்வில் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்களின் தலைமையில் தொடங்கியது. 

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மணமேல்குடி வடக்கூர் பட்டங்காடு இடையாத்திமங்கலம் போன்ற   குடியிருப்புகளில் தீனதயாளன் சாதனா ஹரிஹரன் போன்ற மாணவர்களை இன்று கண்டறிந்து இரண்டு மாணவர்களை பள்ளியில் சேர்க்கப்பட்டது. 

 அதேபோல் சாதனா என்ற மாணவி தஞ்சாவூர் மாவட்டத்தில் படிப்பதினால் அவரை அப்பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 
இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள்  முத்துராமன், வேல்சாமி சிறப்பாசிரியர்கள் மணிமேகலை, கோவேந்தன் மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments