முட்டை மாஸ் சாப்பிட்டுருக்கீங்களா..? புதுக்கோட்டையோட ஃபேமஸான ஃபுட் இதுதான்..! -
பொதுவாகவே எல்லா ஊருக்கும் ஒரு பிரபலமான உணவு கண்டிப்பா இருக்கும். ஒரு சில ஊருக்குஅடையாளமே அந்த பேமஸான இடமோ பொருளாதான் இருக்கும். அதே மாதிரி புதுக்கோட்டையிலபல்வேறு சுற்றுலா தளங்கள், பழமை வாய்ந்த கோவில்கள் இப்படி சிறப்புகள் நிறைய கொட்டி கிடக்கு அதோட புதுக்கோட்டை மாவட்டத்தோட ஃபேமஸான ஃபுட் தான் முட்டை மாஸ் இங்க புதுசா வெளியூர்ல இருந்து வர்றவங்க கண்டிப்பா கேட்டு வாங்கி சாப்பிடுற ஒன்ன தான் இந்த முட்டை மாதிரி இருக்கு. அந்த முட்டமாஸ் ஃரெசிப்பி எப்படி ரெடி பண்றாங்க அதோட ஸ்பெஷல் பத்தி இந்த வீடியோவில் பார்க்கலாம்.

புதுக்கோட்டையில் இருக்க எல்லா ஹோட்டல்லையும் முட்டமாஸ் ரெடி பண்றாங்க ஆனா எல்லாரும் தனித்தனியான ஸ்டைல்லையும் , அவங்களோட மசாலாவும்தான் இங்க புதுசா இருக்கும்னு சொல்றாங்க. முதல்ல முட்டை மாஸ் பண்றதுக்கு முட்டையைஅவிச்சு வச்சு, ஒரு கடாயில் எண்ணெய் ஊத்தி, கட் பண்ணி வச்ச வெங்காயம், தக்காளி பச்சை மிளகாய், இதெல்லாம் சேர்த்து அதோட முட்டை மாஸ்காகவேதனியா ஃப்ரிப்பேர் பண்ண ஒரு ஃக்ரேவிய சேர்த்து அதோட ஸ்பெஷல் மசாலா எல்லாம் சேர்த்து அப்படியேஅதோட முட்டையை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான முட்டை மாஸ் ரெடி ஆகிறது.

இதோட ஸ்பெஷல் பத்தி ஹோட்டல் உரிமையாளர் கிட்ட கேட்கும் போது பொதுவாவே வெளி ஊர்ல இருந்து வர்றவங்களும் சரி உள்ளூர் காரர்களும் யாராக இருந்தாலும் முட்டை மாஸ் விரும்பி சாப்பிடகுடியஒரு உணவாக இருந்துட்டு இருக்கு. அதனாலேயே நாங்க தனியா எங்களுக்கு ஸ்பெஷல் மசாலா எல்லாம் வைத்து இந்த முட்டை மாஸ் வந்து ப்ரிப்பேர் பண்ணி கொடுத்துட்டு இருக்கோம். ஹோட்டல்ல பல ஃசைடிஷ் வகை இருந்தாலும் எல்லாரும் கேட்டு வாங்கி சாப்பிடக்கூடிய மெனுவாக எப்போதுமே அதிக அளவுல போயிட்டு இருக்க ஒரு உணவாக இந்த முட்டை மாஸ் இருக்கு. ஒரு முட்டை மாஸ் 40 ரூபாயிலிருந்து (அதாவது இரண்டு முட்டைகளை வைத்து தாயார் செய்து ) குடுத்துட்டு இருக்கோம். எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய உணவாக புதுக்கோட்டையில் இந்த முட்டை மாஸ் இருக்கு.

News Credit : News 18 Tamilnadu 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments