மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் & முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. - புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தகவல்
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் முதல் கட்டமாக (Phase-I) 24.07.2023 முதல் 04.08.2023 வரை புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, மணமேல்குடி, இலுப்பூர் மற்றும் பொன்னமராவதி ஆகிய வட்டங்களில் முகாம் நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக (Phase-II) 05.08.2023 முதல் 14.08.2023 வரை திருமயம், கறம்பக்குடி, குளத்தூர். விராலிமலை, ஆவுடையார்கோவில் ஆகிய வட்டங்களில் முகாம் நடைபெற்று வருகிறது.
வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்கள் மற்றும் இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதிவாய்ந்த பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 18.08.2023, 19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண். 04322-295022, வாட்ஸ்அப் எண்-94450 45622 ஆகும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா. இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.