புதுமடம் ஊராட்சிக்கு மத்திய அரசின் பாராட்டு சான்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர். இவ்வாறு பொதுமக்கள் அளித்த 213 மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உரிய அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மண்டபம் யூனியனை சேர்ந்த புதுமடம் ஊராட்சி ஆரோக்கியமான மற்றும் உள்கட்டமைப்புகளால் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசால் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழை புதுமடம் ஊராட்சி தலைவர் காமில் உசேனிடம், கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கி பாராட்டினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பயிற்சி சப்-கலெக்டர் சிவானந்தம், ஊராட்சி உதவி இயக்குனர் பரமசிவம், மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments